பாஜக சார்பில் போட்டியிடும் மறைந்த சுவாமி சகஜானந்தாவின் பேரன்!
சென்னை: மறைந்த தலித் ஆன்மீகத் தலைவர் சுவாமி சகஜானந்தாவின் பேரன் எஸ்.பி. சரவணன், பாஜக சார்பில் காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.
சகஜானந்தாவின் அக்காள் வழிப் பேரன் சரவணன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்துள்ளார். விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துரை பேராசிரியாக பணியாற்றியுள்ளார்.

இவரது தாத்தாவான சகஜானந்தா சிதம்பரத்தில் நந்தனார் கல்விக் கழகத்தை உருவாக்கியவர். சகஜானந்தா கடந்த காலத்தில் தலித் ஆன்மீத் தலைவராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கியவர்.
சுவாமி சகஜானந்தா, சுதந்திரத்திற்கு முன்பு 1926 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாகாண மேலவை உறுப்பினராக இருந்தவர். சுதந்திரத்திற்குப் பின்னர் சிதம்பரம் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். 1952, 57 தேர்தல்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1959ம் ஆண்டு அவர் மரணமடைந்தார்.
ஆரணி அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் முனுசாமி என்ற இயற்பெயருடன் பிறந்தவர் சகஜானந்தா. திண்டிவனத்தில் பள்ளியில் படித்தபோது மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கூறி படிப்பை பாதியிலேயே விட்டார். பின்னர் இவரது குடும்பம் கோலாருக்கு இடம் பெயர்ந்தது. அங்கு அவருக்கு ஆன்மீகத் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் சகஜானந்தா மட்டும் சிதம்பரம் திரும்பினார். அங்குதான் இவருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாகி துறவறம் பூண்டார். சகஜானந்தாவாக மாறினார்.
நந்தனாரின் பெயரில் அங்கு மடத்தை நிறுவினார். அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கினார். 1916ம் ஆண்டு இந்த மடம் தொடங்கப்பட்டது. தலித் சிறுமிகளின் கல்விக்காக நிறைய பாடுபட்டவர் சகஜானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications