ராஜஸ்தானில் உயரும் பன்றிக்காய்ச்சல் பலிகள்- சுவிஸ் பெண் உட்பட 130 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்த 70 வயதான சுவிட்சர்லாந்து நாட்டு பெண் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார்.
ஜோத்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆனிமேரி என்ற அந்தப் பெண்மணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். சுவிட்சர்லாந்து நாட்டு தூதரக அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பிறேகே அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications