தாஜ்மஹாலின் பூர்வோத்திரம் என்ன? சு.சுவாமி அடித்துவிடும் பரபர தகவல்கள்
தாஜ்மஹாலின் பூர்வோத்திரம் தொடர்பாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
டெல்லி: தாஜ்மஹாலின் பூர்வோத்திரம் தொடர்பாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் சில தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
உ.பி.யில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே தாஜ்மஹாலுக்கு குறிவைத்துள்ளது. தாம்ஜஹாலை சுற்றுலா தளங்கள் பட்டியலில் இருந்தும் உ.பி. அரசு நீக்கியது.
உ.பி. அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தொடருகிறது. இந்த நிலையில் சிவன் கோவில் இருந்த இடத்தில்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டது என பாஜக எம்.பி. வினய் கட்டியார் கொளுத்துப் போட்டார்.

கோவில் இடத்தில் தாஜ்மஹால்
அவரைத் தொடர்ந்து பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் கோவில் இருந்த இடத்தில் தாஜ்மஹால் இருக்கிறது எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

ஜெப்பூர் ராஜாக்களிடம் இருந்து அபகரிப்பு
தாஜ்மஹால் தொடர்பாக எனக்கு கூடுதல் ஆவணங்கள் கிடைத்துள்ளன. ஜெயப்பூர் ராஜாக்களை மிரட்டியே தாஜ்மஹால் இருக்கும் நிலத்தை பறித்துக் கொண்டார் ஷாஜஹான்.

இணையான மதிப்பு இல்லை
இதற்கு ஈடாக 40 கிராமங்கள், ஜெய்ப்பூர் ராஜாக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தாஜ்மஹால் நிலத்துக்கு இணையான மதிப்பு அல்ல இது.

விரைவில் ஆவணங்கள் வெளியீடு
மேலும் தாஜ்மஹால் நிலத்தில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. இந்த கோவிலை இடித்துவிட்டுத்தான் தாஜ்மஹால் கட்டினார்களா எனத் தெரியவில்லை. இந்த ஆவணங்களை விரைவில் வெளியிட இருக்கிறேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications