கோல்ப் மட்டை, கத்தியை பயன்படுத்தி மகள் ஆருஷியை கொன்ற பெற்றோர்: சி.பி.ஐ. தகவல்
காசியாபாத்: ஆருஷியை அவளது பெற்றோரே கோல்ப் மட்டை மற்றும் சமையலறைக் கத்தியைப் பயன்படுத்திக் கொன்றதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள வீட்டில் டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மகள் ஆருஷி தல்வார் மற்றும் அவர்களது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த இரு கொலைகளையும் செய்ததாக டாக்டர் ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வலுவான ஆதாரங்கள்....
இந்தக் கொலைகளை டாக்டர் ராஜேஷ் தல்வாரும், அவரது மனைவி நூபுர் தல்வாரும் தான் இணைந்து செய்துள்ளனர் என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த வாதத்தின் போது முன் வைத்துள்ளது சிபிஐ.

இண்டர்நெட் ஆதாரம்....
அதில், கொலை நடந்த அன்று இரவு அவரது அறையில் இன்டர்நெட்டை பயன்படுத்தியதற்கான ஆதாரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சி.பி.ஐ.

ஒரே அறையில்...
ஆருஷி கொலை செய்யப் பட்ட அறையிலேயே ஹேம்ராஜும் கொல்லப்பட்டதாகவும், பின்னர் தடயங்களை அழிக்கும் முயற்சியில் டாக்டர் தம்பதியர் ஈடுபட்டது உறுதியாகியிருக்கிறது என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் கூறியுள்ளார்.

கோல்ப் மட்டை....
மேலும், கோல்ப் மட்டை மற்றும் சமையலறை கத்தியை பயன்படுத்தி தல்வார் தம்பதியர் ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்திருப்பதாக சி.பி.ஐ. முடிவுக்கு வந்துள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.

தடயங்கள் அழிப்பு....
ஆருஷியை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரை தனது செல்வாக்கைப் பயன் படுத்தி தவறாக சான்றிதழ் தர முயற்சி செய்ததாகவும், ஹேம்ராஜ் உடலை மாடிக்கு கொண்டு செல்லும் போது, மாடிப்படிகளில் சிந்திய ரத்தக்கரை கழுவி சுத்தம் செய்யப்பட்டதாகவும் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications