கர்நாடகா திறந்துள்ள தண்ணீர் போதாது.. காவிரி கண்காணிப்பு குழுவை நாடியது தமிழக அரசு #cauvery
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா திறந்துவிட்டுள்ள தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சார்பில், காவிரி கண்காணிப்பு குழுவிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரியிலிருந்து இந்த மாதம், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 10 நாட்களுக்குள் சுமார் 13 டிஎம்சி என கணக்கிட்டு தண்ணீர் திறக்க கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதேநேரம், தமிழகத்திற்கு, கூடுதல் தண்ணீர் தேவை என்றால் காவிரி கண்காணிப்பு குழுவை 3 நாட்களுக்குள் நாடவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு தமிழக அரசு இ-மெயில் வாயிலாக காவிரி கண்காணிப்பு குழுவிடம் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பர் 30ம் தேதிக்குள் 134 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவுபடி சுமார் 13 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது இருப்பில் உள்ள நீரும், கர்நாடகம் திறந்துவிட்டுள்ள நீரும் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. சுமார் 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு 60 டிஎம்சி தண்ணீர் உடனடியாக தேவை.
எனவே உடனடியாக காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்டி விவசாயத்திற்கு தேவையான 60 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications