பெங்களூரில் தான்சானிய மாணவி நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டதை அறிந்து சுஷ்மா ஸ்வராஜ் வேதனை
டெல்லி: பெங்களூரில் தான்சானியாவைச் சேர்ந்த மாணவி ஒரு கும்பலால் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் தான்சானியாவைச் சேர்ந்த 21 வயது மாணவியை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, தாக்கி, ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. அந்த இடத்தில் போலீசார் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
We are deeply pained over the shameful incident with a Tanzanian girl in Bengaluru.
— Sushma Swaraj (@SushmaSwaraj) February 3, 2016
வேதனை
பெங்களூரில் தான்சானியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்த வெட்கக்கேடான விஷயம் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தோம்.
கர்நாடக முதல்வர்
I have asked the Chief Minister to ensure safety and security of all foreign students and stringent punishment for the guilty.
— Sushma Swaraj (@SushmaSwaraj) February 3, 2016
இது குறித்து நான் கர்நாடக முதல்வரிடம் பேசியுள்ளேன். அனைத்து வெளிநாட்டு மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறும் அவரிடம் தெரிவித்துள்ளேன்.
கைது
I spoke to the Chief Minister Karnataka. He informed me that a criminal case has been registered and four accused have been arrested.
— Sushma Swaraj (@SushmaSwaraj) February 3, 2016
சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் என்னிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications