ஆந்திராவில் ராஜினாமா படலம் தொடங்கியது- முதல்வர் கிரண்குமார் நாளை பதவி விலகுகிறார்!!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தொடங்கியுள்ளனர். முதல்வர் கிரண்குமார் ரெட்டி நாளை ராஜினாமா செய்ய உள்ளார்.

தெலுங்கானா தனி மாநில மசோதா கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் இன்று நிறைவேறியது. லோக்சபா நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு தெலுங்கானா மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு சீமாந்திரா எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அமைச்சர்கள் ஜி. கண்டா சீனிவாஸ் ராவ், ஈரசு பிரதாப் ரெட்டி ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நாளை தமது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
பந்த்
இதனிடையே தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். லோக்சபாவில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டு தெலுங்கானா மசோதா நிறைவேற்றியது ஒரு கறுப்பு தினம் என்றும் அவர் சாடியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications