"அடடே இதை பாருங்க.." குழந்தையாகவே மாறிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.. நுங்கு வண்டி ஓட்டி அசத்தல்
தென்காசி: தென்காசியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை, குழந்தையாகவே மாறி விளையாடிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தெலங்கானாவுக்கு ஆளுநராகவும் புதுவைக்குத் துணை நிலை ஆளுநராகவும் உள்ளவர் தமிழிசை சவுந்தரராஜன். இரு மாநிலங்களுக்கும் மாறி மாறி சென்று ஆளுநர் பொறுப்பைக் கவனித்து வருகிறார்.
அதேநேரம் தமிழ்நாட்டிலும் கூட தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகிறார். ஆளுநராக இருப்பதால் பல்வேறு அரசியல் சாராத நிகழ்வுகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

தென்காசி
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. அத்துடன் நாடார் வாலிபர் சங்க 33ஆவது ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். அவருடன் பாஜக மாநில துணைத்தலைவர் திரு.கருணாகரன், தென்காசி எம்எல்ஏ பழனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பனை மரம்
இதில் கண்காட்சியும் நடைபெற்றது. அதில் பனை மரங்களில் இருந்து செய்யப்பட்ட நுங்கு வண்டி, பனை பெட்டி, அலங்கார பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதைப் பொதுமக்கள் அனைவரும் ரொம்பவே ஆர்வமாகப் பார்த்து ரசித்துச் சென்றனர். 90s கிட்ஸ் பெரும்பாலானோர் நுங்கு சாப்பிட்டிருப்பார்கள். அதேபோல பனை மரங்கள் குறித்தும் தெரியும். ஆனால், நகரமயமாக்கல் காரணமாக 2கே கிட்ஸுக்கு பனை மரம் பற்றியே தெரியாமல் போய்விட்டது.

நுங்கு வண்டி
இதனால் அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்ட பனை மரங்களில் இருந்து செய்யப்பட்ட பொருட்களை ஆர்வமாகப் பார்த்து ரசித்துச் சென்றார். பனை மரங்களில் இருந்து செய்யப்பட்ட நுங்கு வண்டி, பனை பெட்டி, அலங்கார பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இதைப் பார்த்ததும் உற்சாகமடைந்தார். மேலும், குழந்தையாகவே மாறி அவர் நுங்கு வண்டி ஓட்டி மகிழ்ந்தார்.

ஆளுநர் தமிழிசை பேச்சு
அங்கிருந்த அலங்கார பொருட்களை ஆர்வமாகப் பார்த்த ஆளுநர் தமிழிசை அது குறித்தும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை, "உங்களில் ஒருவராகவே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ஆனால், ஆளுநர் என்பதால் போலீஸ் கெடுபிடி சற்று அதிகமாக உள்ளது. அதற்காகப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தலைவர் காமராஜர். அவர் கொண்டு வந்த திட்டங்களால் தமிழ்நாடு பல்வேறு பலன்களைப் பெற்றுள்ளது.

வெற்றி ரகசியம்
அவரது வழியில் வந்ததால் தான் என்னால் இந்த இடத்திற்கு வர முடிந்துள்ளது. அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற 3 ரகசியங்கள் உள்ளன. உழைப்பு, உழைப்பு உழைப்பு மட்டுமே வெற்றியின் ரகசியம். எவ்வித சோர்வும் இல்லாமல் தீவிரமாக உழைத்தால் நம் அனைவருக்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழிசை சவுந்தரராஜன் உற்சாகமாக நுங்கு வண்டி ஓட்டிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆலங்குளம் அரிவாள் வெட்டு சம்பவம்.. டிரோன் உதவியுடன் சிறார்கள் உள்பட 8 பேர் கைது! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications