தெலுங்கானாவில் போலீசார், மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் பலி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சூட்டில் பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சோம்லகட்டா அருகே உள்ள கரீம்நகர்-கம்மம்-வாரங்கல் கமிட்டி காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை அந்த காட்டுப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். காட்டுப்பகுதியில் நடந்த கடும் துப்பாக்கிச்சூட்டில் பெண் உள்பட இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் தரப்பில் உயிர் இழப்பு எதுவும் இல்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications