ஓய்வுக்குப் பின்... டெண்டுல்கர் கலந்து கொண்ட முதல் நாடாளுமன்ற கூட்டம்
டெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் முதன்முறையாக இன்று ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொண்டார் சச்சின் டெண்டுல்கர்.
சமீபத்தில் நடைபெற்ற போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சமூக சேவையில் இறங்கினார்.
அதன்படி, ஐக்கிய நாடுகள் (ஐ.நா) அமைப்பின் ஒரு அங்கமான யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் சச்சின். ‘சுத்தமான கழிவறை; அழுக்கற்ற தூய்மையான கைகள்' என்ற நோக்கத்தோடு செயல்படும் இந்த அமைப்பின் சார்பில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறார் சச்சின்.
இந்நிலையில், நடந்து கொண்டிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார் சச்சின்.

வணக்கம்....
தனது இருக்கைக்கு சென்று அமர்ந்த அவருக்கு, எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் தங்களது வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

வாழ்த்து....
கூட்டம் தொடங்கியதும், நாடாளுமன்றத் தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, சச்சினுக்கு வழங்கப் பட உள்ள பாரத ரத்னா விருதுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது.

நன்றி....
உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி தந்த வாழ்த்துச் செய்திக்கு பதில் மரியாதை தரும் விதமாக எழுந்து நின்று கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தார் சச்சின்.

ஆட்டோகிராப்...
அதன் பிறகு, சபை ஒத்தி வைக்கப் பட்டது. அந்தநேரத்தில் எழுந்து வந்த அவை உறுப்பினர்கள் வரிசையில் நின்று தங்களது வாழ்த்தை நேரடியாக கை குலுக்கி சச்சினுக்குத் தெரிவித்தனர். சிலர் ஆட்டோகிராப்பும் பெற்றுச் சென்றனர்.

புன்னகையோடு நன்றி...
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் புன்னகை தவழும் முகத்தோடு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் சச்சின்.

ஓய்வுக்குப் பின்...
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டார் சச்சின். ஆனபோதும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications