பெண் புலியை கொன்று தின்ற ஆண் புலி.. வன அலுவலர்கள் ஷாக்
போபால்:மத்தியப் பிரதேசத்தில் பெண் புலியை, ஒரு ஆண் புலி அடித்துக் கொன்று தின்றிருப்பதாக வன அலுவலர்கள் தெரிவித்துள்ள சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகளவிலான புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் வசித்து வருகின்றன. இங்கு நடைபெற்ற ஒரு விநோத சம்பவம் வன அலுவலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
பூங்கா பகுதிக்குள் வன காவலர்கள் ரோந்து பணியினை மேற்கொண்ட போது, ஒரு இடத்தில் புலியின் எலும்புகள் ரத்தக் கறையுடன் சிதறிக்கிடந்துள்ளதை கண்டனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

புலியை சாகடித்த புலி
சம்பவ இடத்திற்கு வந்த உயரதிகாரிகள், கொல்லப்பட்டது பெண் புலி என்றும், அதை காட்டில் வசிக்கும் ஆண் புலி ஒன்று கொன்று தின்றுள்ளது என்றும் கண்டறிந்தனர். இது விநோத சம்பவம் அலுவலர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

அபூர்வ சம்பவம்
இது குறித்து தேசிய பூங்கா இயக்குநர் கிருஷ்ண்மூர்த்தி கூறுகையில், ஒரு புலி மற்றொரு புலியை அடித்துக்கொன்று சாப்பிடுவது அபூர்வ சம்பவமாகும். இத்தகைய சம்பவம் இதுவரை நடந்தது இல்லை.

உணவுகள் தரப்பட்டன
மேலும், பெண் புலியை கொன்று தின்ற ஆண் புலிக்கு போதிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஆண் புலி, பெண் புலியை கொன்று தின்றுள்ளது. இது மிகவும் விநோதமாக உள்ளதால் அதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

உடற்கூறு பரிசோதனை
சில சமயங்களில் தனது குட்டியை புலிகள் தின்ற சம்பவம் நடந்தது உண்டு. ஆனால் ஒரு பெரிய புலியை மற்றொரு புலி அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்தது இல்லை. கொல்லப்பட்ட பெண் புலியின் எஞ்சிய உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புள்ளி விவரங்கள் இல்லை
உலகளவில் புலியின் வாழ்வாதாரத்தை வைத்து இதுவரை சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை. இது முற்றிலும் விநோதமாக உள்ளது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவிலேயே அதிகளவில் புலி வசிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது. அதை சிறப்பிக்கும் வகையில், 1995ம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் புலிகள் மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications