தாத்ரி சம்பவத்துக்கு பழிவாங்க தீவிரவாதிகள் பயங்கர சதி - உளவுத்துறை 'வார்னிங்'
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி வதந்தியால் இஸ்லாமிய முதியவர் இக்லாக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பழிவாங்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக கூறி, முகமது இக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர் மதவெறி கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பழிவாங்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
அலகாபாத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாத்ரி சம்பவத்துக்குப் பழிவாங்க, உத்தரபிரதேச சட்டசபை, அலகாபாத் உயர்நீதிமன்றம், முன்னாள் ராணுவ வீரர்களின் குடியிருப்புகள் மீதும் தீவிரவாதிகள் தங்களது ஸ்லீப்பர் செல்கள் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை தீவிரவாதிகள் சீர்குலைக்கலாம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications