ராணுவ பலத்தை பறைசாற்றும் கம்பீர அணிவகுப்பு... டெல்லியில் பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு!
நாட்டின் 68வது குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் ராணுவ பலத்தை பறைசாற்றும் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது.
டெல்லி: நாட்டின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி ராஜ்பாத்தில் தேசியக்கொடியை ஏற்றினார். இதைத்தொடர்ந்து முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது.
இந்தியாவின் 68 குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தார்.
‘Dare Devils’- motorcycle display team of Corps of Military Police #RepublicDay pic.twitter.com/E8yAMJH5LC
— ANI (@ANI_news) January 26, 2017
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கண்கவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்ட அவர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். முப்படைகளின் பலத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்புகள் நடைபெற்றன.
இதில் அக்னி ஏவுகணைகள், பீரங்கிகள், இந்திய ராணுவ ஊர்திகள் இடம்பெற்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. ராணுவத்தின் நவீன தளவாடங்கள், ஆயுதங்கள் அணி வகுப்பில் பங்கேற்றன.
இசைவாத்தியங்களை முழங்கியப்படி சீருடையில் முப்படை வீரர்களும் அணிவகுத்துச் சென்றனர். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.
ஓவ்வொரு மாநிலத்தின் சிறப்பு மறும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வாகனங்களின் அணிவகுப்பு அம்மாநில பாரம்பரிய நடனத்துட்ன் நடைபெற்றது. அப்போது அந்தந்த மாநில சிறப்பு விருந்தினர்கள் எழுந்து நின்று கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.
இதனை ஆயிரக்கணக்கானோர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் பங்கேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications