கிணற்றில் விழுந்த யானைக்குட்டி.. தட்டுத் தடுமாறி.. தானே மேலே ஏறி மீண்டு வந்த வைரல் வீடியோ
கிணற்றில் விழுந்த யானைக்குட்டி தனியே போராடி வெளியே எழுந்து சென்றது.
தேன்கனல், ஒடிசா: யானைக்குட்டி ஒன்று கிணற்றில் விழுந்து படாத பாடு பட்ட காட்சி வீடியோவாக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
பொதுவாக யானை குட்டி அசைந்து அசைந்து நடந்து வந்தாலே பார்க்க கொள்ளை அழகுதான்! அப்படி நடை பழகும் ஒரு யானைக்குட்டிதான் கிணற்றில் விழுந்துவிட்டது. ஒடிசா மாநிலம் தேன்கனல் என்ற பகுதி உள்ளது. இங்கு யானைகள் சரணாலயம் ஒன்று இருக்கிறது.
இந்த சரணாலயத்திலிருந்து ஒரு யானைக்குட்டி தண்ணீர் தேடி தவறி ஊருக்குள் வந்துவிட்டது. வரும் வழியில் அதன் கண்ணில் ஒரு கிணறு படவும் தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது. ஆனால் பாவம்... குட்டிதானே? நாசூக்காக தண்ணீர் குடிக்க தெரியாமல் அந்த கிணற்றில் விழுந்துவிட்டது. அந்த கிணறோ ஒரு பாழடைந்த கிணறு வேறு.
[மாரிமுத்தாள் கேட்டு இல்லைன்னு சொல்வதா.. நோ... நகை கடையே லவட்டிக் கொண்டு போன கணேசன்!]

மிரண்ட யானை
உள்ளே விழுந்த யானைக்குட்டியால் திரும்பவும் எப்படி வெளியே எழுந்து போவது என தெரியவில்லை. தன் சகாக்கள் யாரும் கூட இல்லாததால் யானை மிரண்டது. வழி தெரியாமல் பிளிற ஆரம்பித்துவிட்டது.

கூச்சலிட்ட மக்கள்
இந்த சத்தத்தை கேட்டு ஊர் மக்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது. அந்த கிணற்றிலிருந்து வெளியே வர தனியே போராடியது. யானைக்குட்டி எப்படி வெளியே வரப்போகிறது என்று மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கூச்சலிட்டு கொண்டே இருந்தார்கள்.

தளராத யானை
ஒவ்வொரு முறை எழ முயற்சிக்கும்போதும் சரிந்து சரிந்து மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தது. கடைசியாக தன் முயற்சியிலிருந்து மனம் தளராத யானை சறுக்கினாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து போராடியது.
|
கைதட்டி ஆரவாரம்
கடைசியாக தட்டுத்தடுமாறி ஒருவழியாக வெளியே விட்டது. இதனால் கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் இதையெல்லாம் அந்த யானைக்குட்டி கண்டுக்கவே இல்லை... சைஸாக தனது இருப்பிடத்தை நோக்கி நடையைக் கட்டியது.












Click it and Unblock the Notifications