ஆசியப் பெண்களே... உங்க பொட்டுல “அயோடின்” இருக்கா?
டெல்லி: ஆசியப் பெண்களின் அயோடின் குறைபாட்டை போக்கும் வகையில், உயிர் காக்கும் பொட்டுக்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
காய்டர் எனும் முன் கழுத்துக் கழலை நோய் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து உலகின் பல நாடுகளில் அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
ஆண்களைக் காட்டிலும் அதிகளவில் பெண்களே அயோடின் குறைபாட்டால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ரத்தச்சோகையில் துவங்கி, மார்பக நோய்கள், புற்றுநோய் மற்றும் பிரசவத்தின் போது உயிரிழப்பு என அயோடின் பாதிப்பால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம், ஏராளம்.

அயோடின் குறைபாடு...
வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அயோடின் கலந்த உப்பு மற்றும் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால், கிராமங்கள் நிறைந்த இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான் அயோடின் குறைபாட்டால் அதிகளவில் பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

உயிர் காக்கும் பொட்டு...
எனவே, இத்தகைய பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, எளிய முறையில் அயோடின் குறைபாட்டை போக்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நீல்வசந்த் மருத்துவ மற்றும் ஆய்வு கழகம் என்ற இந்திய நிறுவனமும், சிங்கப்பூரின் கெய் விளம்பர குழுமமும் இணைந்து "உயிர் காக்கும் பொட்டு" ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

ஸ்டிக்கர் பொட்டு வடிவில்...
இந்த உயிர் காக்கும் பொட்டு பெண்கள் நெற்றியில் அணியும் ஸ்டிக்கர் பொட்டு வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நெற்றியில்-புருவத்தின் மையப்பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் அந்த பொட்டில் கலந்திருக்கும் அயோடின், அவர்களின் தோல் வழியாக உடல் முழுவதும் பரவி, அதன் மூலம் தினசரி வாழ்வில் அவர்களுக்கு தேவையான அயோடின் சத்தினை அளிக்கிறது.

மருத்துவ முகாம்கள்...
இந்த அயோடின் பொட்டுக்கள் ஊட்டசத்து குறைபாடு நிறைந்த பெண்கள் வசிக்கும் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்கள் நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாத்திரைகளுக்கு பதிலாக இந்தப் பொட்டுகள் வழங்கப் படுகின்றன.
விழிப்புணர்வு பிரச்சாரம்...
கடந்த மார்ச் மாதம் முதல் இந்த பொட்டுக்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. அனைவரிடமும் அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரமாக இதனை நினைப்பதாக இந்த பிரத்யேக பொட்டினை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications