For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூம்லாம் இல்லை.. கொடுக்க முடியாது.. மோடிக்கே 'நோ' சொன்ன மைசூர் ஹோட்டல் நிர்வாகம்!

பிரதமர் மோடி தங்குவதற்கு அறை எதுவும் இல்லை என்று மைசூரில் உள்ள ஹோட்டல் லலிதா மஹால் பேலஸ் தெரிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடி தங்குவதற்கு ரூம் இல்லையென்ற மைசூர் ஹோட்டல்- வீடியோ

    மைசூர்: பிரதமர் மோடி தங்குவதற்கு அறை எதுவும் இல்லை என்று மைசூரில் உள்ள ஹோட்டல் லலிதா மஹால் பேலஸ் தெரிவித்து இருக்கிறது. இதனால் மோடி தங்குவதற்கு வேறு அறை தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

    அறை கொடுக்க முடியாததற்கு நிறைய காரணம் சொல்லப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணமாகும்.

    இதனால் கடைசி நேரத்தில் மோடிக்காக அவசர அவசரமாக வேறு ஹோட்டல் தேடப்பட்டது. ஆனால் அந்த ஹோட்டலிலும் பிரச்சனை இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    கர்நாடகாவில் இன்னும் சில வாரத்தில் மாநில தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக பாஜக கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் பாஜக நடந்தும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மைசூர் வந்துள்ளார். அப்போதுதான் இந்த பிரச்சனை உருவாகி இருக்கிறது.

    விழா

    விழா

    அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மைசூரில் உள்ள ஹோட்டல் லலிதா மஹால் பேலஸில் அறை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. கல்யாணம் விழா ஒன்று நடக்க இருப்பதால பெரும்பாலான அறைகள் அங்கு ஏற்கனவே புக் ஆகி இருக்கிறது. இதனால் மோடியிடம் அறை இல்லை என்றுள்ளனர்.

     3 மட்டும்

    3 மட்டும்

    ஆனால் 3 அறைகள் அங்கு இருந்து இருக்கிறது. ஆனால் மோடியுடன் இன்னும் சில அதிகாரிகளும், காவலாளிகளை தங்க வேண்டும். இதனால் அங்கு இடம் போதாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இது பாதுகாப்பாக இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

     இரவோடு இரவு

    இரவோடு இரவு

    இதற்காக இரவோடு இரவாக மோடி, ஹோட்டல் ராட்டிசன் ப்ளுவில் தக்கவைக்கப்பட்டார். ஆனால் அங்கும் திருமண விழா ஒன்றிற்காக புக் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் பாஜக நிர்வாகம் அவர்களிடம் பேசி வேறு ஹோட்டலுக்கு அவர்களை மாற்றி இருக்கிறார்கள்.

    English summary
    There is no room for Modiji says Mysuru's Hotel Lalitha Mahal Palace. They denied room due to over booking. Karnataka BJP later booked room for Modi in Mysore's Hotel Radisson Blu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X