ஏமனில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் இன்குபேட்டரில் பயணித்த பிறந்து 7 நாளே ஆன பார்வதி
கொச்சி: ஏமனில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு விமானத்தில் இன்குபேட்டரில் வைத்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து 4 ஆயிரத்து 600 இந்தியர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. ஏமனில் வசித்து வந்த ராஜி என்பவர் குறைமாதத்தில் பார்வதி என்ற பெண் குழந்தையை பெற்றார்.

இந்நிலையில் குழந்தையுடன் ராஜி ஏமனில் உள்ள சனா நகரில் இந்தியர்கள் மீட்கப்படும் இடத்திற்கு வந்தார். அவர்கள் விமானம் மூலம் அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைக்கு மஞ்சள்காமாலை, மூச்சு திணறல் பிரச்சனை இருப்பது தெரிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் குழந்தையை இன்குபேட்டரில் வைத்தனர். பின்னர் குழந்தையை இன்குபேட்டருடன் இந்தியாவுக்கு கிளம்பிய விமானத்தில் டாக்டர் உமா நம்பியார் என்பவர் துணையுடன் அனுப்பி வைத்தனர்.
குழந்தை வந்த விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. குழந்தைக்கு கொச்சியில் உள்ள அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயன்சஸில் சிகிச்சை அளிக்க கேரள அரசு வழிவகை செய்து கொடுத்தது.
ராஜியின் கணவர் ஏமனில் இருந்து கப்பலில் மீட்கப்பட்டு ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் இந்தியா அழைத்து வரப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications