பெங்களூரில் இடி மின்னலுடன் கூடிய பேய் மழை: சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட 4 விமானங்கள்
பெங்களூர்: பெங்களூரில் வியாழக்கிழமை மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் 4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

பெங்களூரில் கோடை காலத்தில் அவ்வப்போது இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் மேகம் கூடி பலத்த காற்று வீசியது.

காற்று சுழற்றி சுழற்றி அடித்து முடித்த வேகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாலை 4 மணி அளவில் பெய்யத் துவங்கிய மழை இரவு 8.30 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் பெங்களூர் வந்த 4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

பலத்த காற்று வீசியதால் பெங்களூரின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு இடத்தில் மரம் பெயர்ந்து சாலையில் சென்ற கார் மீது விழுந்தது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன பெங்களூரில் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழை துவங்கியதும் சாலையோரம் உள்ள இடங்களில் ஒதுங்கிய இரு சக்கர வாகன ஓட்டிகள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கால் வலிக்க நின்று கொண்டிருந்தனர். மழை இப்போது நின்றுவிடும், அப்போது நின்றுவிடும் என்று நினைத்து மணிக்கணக்கில் சாலையோரம் நின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications