திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 25ல் ஆழ்வார் திருமஞ்சனம்

தெலுங்கு வருட பிறப்பையொட்டி வருகிற 31ம் தேதி ஜெயநாம வருடம் பிறக்கிறது. அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
இதையொட்டி ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. கோவிலை வாசனை திரவியங்கள் கொண்டு சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியே ஆழ்வார் திருமஞ்சனம் ஆகும்.
மார்ச் 25ம் தேதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்த கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவிலின் மூலவர் சன்னிதி, தங்கவாசல், வகுலமாதே சன்னிதி, லட்சுமி நரசிம்ம சாமி சன்னிதி, வரதராஜசுவாமி சன்னிதி உள்பட கோவிலின் அனைத்து சன்னிதிகளும் சுகந்த திரவியங்கள் மூலம் சுத்தப்படுத்தப்படும். அப்போது மூலவர் ஏழுமலையான் விலை உயர்ந்தபட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டு இருக்கும்.
இந்த கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி அன்று காலையில் ஏழுமலையானுக்கு நடைபெறும் அஷ்டலபாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படும்.
நண்பகல் 12 மணிக்கு பின்னர் நைவேத்தியம் முடிந்ததும் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பிரத்யேக தரிசனம், சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் போன்றவற்றிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருப்பதி கோவிலில் உகாதி ஆஸ்தானம், ஆனி வார ஆஸ்தானம், பிரம்மோற்வம், வைகுண்ட ஏகாதசி என வருடத்தில் 4 முறை மட்டுமே ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications