செம்மரம் விவகாரம்: ஆந்திரா சிறையில் வாடும் 32 தமிழர்களுக்கு ஜாமீன் கிடைத்தது
ஆந்திரா சிறையில் உள்ள 32 தமிழர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: செம்மரம் வெட்ட வந்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 32 தமிழர்களுக்கு திருப்பதி நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
ஆந்திரா போலீசார் மற்றும் வனத்துறையால் 3 மாதங்களுக்கு முன்னர் 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே செம்மரக் கடத்தல்காரர்கள் என குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது ஆந்திரா.

இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி திருப்பதி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முதலில் இவர்களது மனுக்களை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இம்மனுக்களை மீண்டும் விசாரித்த திருப்பதி நீதிமன்றம் அனைவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இது திருவண்ணாமலை சுற்றுவட்டார மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications