முல்லைப் பெரியாறு அணைக்கு சி.எஃப்.எஸ் பாதுகாப்பு கேட்ட மனுவைத் திரும்பப் பெற்றது தமிழக அரசு
டெல்லி: கேரள முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்க செய்திருந்த இடைக்கால மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் சார்பில் இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் இடைக்கால மனுவுக்கு நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை திருத்தும் வகையில் இடைக்கால மனு தாக்கல் செய்ய முடியாது என தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறினார்.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் த்ரிவேதி, தமிழக அரசின் இடைக்கால மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மேலும், இதுதொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிஅடத்தக்கது.












Click it and Unblock the Notifications