கழிவறையில் இருந்து வெளியான துர்நாற்றம்.. நொந்துபோன விமானி.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தின் கழிவறையில் இருந்து திடீரென பயங்கர துர்நாற்றம் வீசியதால் பயணிகள் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
ஹைதராபாத்: பெங்களூரிலிருந்து சென்ற விமானத்தின் கழிவறையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் நொந்துபோன விமானி அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். விமானம் திடீரென தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பைஸ்ஜெட்டிற்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானம் நேற்று பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இதில் நான்கு குழந்தைகள் உள்பட 188 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

விமானம் ஹைதராபாத் அருகே நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கழிவறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இந்த துர்நாற்றம் விமானிகளின் காக்பிட் அறைக்கும் சென்றது.
இதனால் விமானியால் தொடர்ந்து விமானத்தை ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டது. துர்நாற்றத்தால் நொந்துபோன விமானி விமானத்தை அவசர அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கினார்.
அங்கு கழிவறை நன்றாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் காக்பிட்டில் சூழ்ந்திருந்த துர்நாற்றம் விலகியதும் சுமார் அரைமணி நேரம் கழித்து விமானம் ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது.
கழிவறை துர்நாற்றத்தால் விமானம் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications