கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் சுந்தருக்கு ரஷ்யாவின் உயரிய விருது!
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் ஆர். சண்முகம் சுந்தருக்கு ரஷ்ய அரசு உயரிய விருது அளித்துக் கெளரவப்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான Order of Friendship விருது சுந்தருக்கு அளிக்கப்பட்டது. இந்த விருதை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கட்கின் வழங்கிக் கெளறவித்தார். சனிக்கிழமை டெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கலந்து கொண்டார்.

1994ம் ஆண்டு இந்த விருது நிர்மானிக்கப்பட்டது. அமைதி, நட்புறவு, இரு தரப்பு ஒத்துழைப்பு, புரிந்து கொள்ளுதல் தொடர்பாக சிறப்பாக செயல்படும் ரஷ்ய மற்றும் வெளிநாட்டினருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பு அதிகாரி தாத்தியானா குடினோவா ஒன்இந்தியாவிடம் கூறுகையில், அதிபர் விலாடிமிர் புடின் கடந்த ஜனவரி மாதம் இந்த விருதை சுந்தருக்கு அறிவித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். அப்போது விருதை வாங்க முடியாத நிலையில் சுந்தர் இருந்ததால் விருதை தூதரகத்தில் வைத்திருந்தோம். தற்போதுதான் விழாவை நடத்த முடிந்தது என்றார்.
கூடங்குளம் அணு மின் நிலைய செயல்பாட்டுக்கு முக்கியப் பங்காற்றியவர் சுந்தர் என்பதால் அதைப் பாராட்டும் வகையில் இந்த விருதை ரஷ்யா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதைப் பெற்றுக் கொண்ட சுந்தர் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டம் நனவாக உழைத்த அனைத்து இந்தியத் தொழிலாளர்களுக்கும், நிபுணர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது என்றார்.
ரஷ்ய தொழில்நுட்பத்தில், ரஷ்ய அரசின் உதவியுடன் கடந்த 1988ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் கூடங்குளம் அணு மின் நிலையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications