ஜெயலலிதா மீது வழக்குப் போட அனுமதி தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் 'டிராபிக்' ராமசாமி மனு!
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், பதவிப்பிரமாணத்தை மீறும் வகையில் நடந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராக தம்மீதான ஊழல் வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவரே மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி கடந்த ஜூன் மாதம் ஆளுநருக்கு ஒரு மனு வழங்கியிருந்தேன். அந்த மனு மீது ஆளுநர் அலுவலகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனு அனுப்பியிருக்கிறேன் என்று ராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications