பீகாரில் பெரும் சோகம்! ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி பலி.. ஜிவித்புத்ரிகா பண்டிகையின் போது துயரம்
பாட்னா: பீகாரில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் நலனுக்காக மூன்று நாள் விரதம் இருக்கும் ஜிவித்புத்ரிகா பண்டிகையின் போது நீரில் மூழ்கி 22 பேர் பலியாகியிருப்பது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் ஐப்பசி மாதத்தில் ஜிவித்புத்ரிகா எனும் பண்டிகை இந்துகளால் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படும். பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்துக்களாலும் இந்த பண்டிகை கொண்டாப்படுகிறது. ஜிவித்புத்ரிகா பண்டிகையின் போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக நோன்பு இருப்பார்கள்.

மூன்று நாள் நோன்பு முடிவில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் விரதத்தை பெண்கள் முடிப்பார்கள். இந்த பண்டிகையின் போது நீர் நிலைகளில் நீராடி பெண்கள் 24 பேர் பலியாகினர். ஒரே நாளில் பீகாரில் வெவ்வேறு இடங்களில் என மொத்தம் 24 பேர் பலியானது அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் போஜ்பூரில் 15 மற்றும் 20 வயதே ஆன இரண்டு இளம் பெண்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
ஆற்றின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்து நீரில் சிறுமி அடித்து செல்லப்பட சிறுமியை காப்பற்ற ஆற்றில் குதித்த இளம்பெண்ணும் பலியானார். இதேபோல பீகாரின் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மொத்தம் 24 பேர் ஒருநாளில் பலியாகியுள்ளனர். இது குறித்து பீகார் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டிருப்பதாவது:-
"போஜ்பூரில் ஐந்து பேரும், ஜெகன்பாத்தில் 4 பேரும், பாட்னா மற்றும் ரோகத்ஸ் பகுதிகளில் தலா மூன்று பேரும் தர்பங்கா மர்ரும் நவடா ஆகிய மாவட்டங்களில் இரண்டு பேரும் கைமுமர், மதேபுரா மற்றும் அவுரங்கபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 22 பேர் ஒரே நாளில் பலியாகினர். உயிரிழப்பு தொடர்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், பலியனவர்களின் குடும்பத்தினருக்கு ரு. 4 லட்சம் நிவாரண உதவியாக அறிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications