தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்ட பஸ்களால் பெங்களூரு பயணிகள் அவதி!
பெங்களூரு: தமிழகம்-பெங்களூரு நடுவேயான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர்கள் நடந்து இரு மாநில எல்லைகளையும் மக்கள் கடந்தனர்.

மேகதாது பகுதியில் கர்நாடகம் அணை கட்டுவதை கண்டித்து இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. எனவே, கர்நாடக பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. பந்த் மீதான கோபத்தால், தமிழக பஸ்கள் மீது கர்நாடகாவில் தாக்குதல் நடந்துவிடலாம் என்ற அச்சத்தால், தமிழக பஸ்களும், கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை.
எனவே, ஒசூர்-பெங்களூரு எல்லையான ஜுஜுவாடியில், பெங்களூரு செல்லும் தமிழக பஸ்களும், கர்நாடகாவில் இருந்து தமிழகம் செல்லும் கர்நாடக பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால், எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று அடுத்த மாநிலத்திற்குள் செல்ல வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டது.
கர்நாடக எல்லையில் இறங்கும், பயணிகள், நடந்தே தமிழக எல்லைக்கு வந்து தமிழக பஸ்களில் போக வேண்டிய ஊர்களுக்கு கிளம்பினர். அதேபோல பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள் கர்நாடக எல்லைக்குள் நடந்து சென்று கர்நாடக பஸ்களில் ஏறி பெங்களூரு வந்தனர்.
பெங்களூருவில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள், வீக் என்ட் காரணமாக, நேற்றிரவே தங்கள் ஊர்களுக்கு சென்றுவிட்டதால் அவர்களில் பெரும்பாலானோர் இன்று தப்பினர். மா்லையில் இருந்து பஸ்கள் வழக்கம்போல இயங்க தொடங்கின.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications