மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தான் "கிங்.." எவ்வளவு முயன்றாலும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை.! பரபர சர்வே
கொல்கத்தா: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் எண்பது குறித்து லோக்போல் அமைப்பு புதிய சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்த ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து திரிணாமுல் வெளியேறித் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் அங்கே திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக vs காங்கிரஸ் என்று மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் சர்வே: இதற்கிடையே மேற்கு வங்க லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக லோக்போல் அமைப்பு புதிய சர்வே முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜகவுக்குக் கணிசமான இடங்கள் கிடைக்கும் என்றாலும் கூட அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்காது என்று இந்த லோக்போல் அமைப்பு தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 சீட்கள் இருக்கும் நிலையில், திரிணாமுல் கட்சி 26- 28 சீட்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக 11 முதல் 13 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடதுசாரிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், அங்கே அவர்கள் 2 முதல் 4 சீட்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முறை மேற்கு வங்கத்தில் திரிணாமுலை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக முயன்ற போதிலும், அவர்களால் அது முடியாது என்றே இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
காரணங்கள்: முதன்மை எதிர்க்கட்சியாக இருப்பதால், திரிணாமுல் காங்கிரஸ் மீதான ஊழல் புகார்களுக்கு எதிரான வாக்குகள் அதிகம் பாஜகவுக்கே செல்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும் இந்த ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் கிடைத்தாலும் கூட அது மிகக் குறைந்த அளவே செல்கிறது.
மேற்கு வங்கத்தில் சிஏஏ மூலம் ஆதரவை அதிகரிக்க முடியும் என பாஜக நம்பியது. நமோசூத்ரா மற்றும் ராஜ்பங்ஷி வாக்காளர்களைக் கவர பாஜகவின் முயற்சி தோல்வியடைந்தது.. ஏனென்றால் அவர்களால் சிஏஏ கீழ் குடியுரிமை பெறத் தேவையான ஆவணங்களைத் தர முடியவில்லை. மேலும் மம்தாவும் சிஏஏவால் ஆபத்து என்ற பிரச்சாரத்தை வெற்றிகரமாக மக்களிடம் எடுத்துச் சென்றுவிட்டார்.
இஸ்லாமியர்கள்: சிஏஏ காரணமாக இஸ்லாமியர்கள் வாக்குகள் பாஜகவுக்கு எதிராத திரும்பி உள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதியில் திரிணாமுல் காங்கிரஸுக்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் செல்கிறது. அதேநேரம் மால்டா உள்ளிட்ட சில தொகுதிகளில் அது காங்கிரசுக்குச் செல்கிறது. மேலும், அங்கே பாஜகவின் பிரச்சாரத்தை திரிணாமுல் ஈஸியாக சமாளித்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாம் தான் பாஜகவின் வெற்றி வாய்ப்பை அங்குப் பாதிக்கிறது.
கடந்த தேர்தல்: கடந்த 2019 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை பாஜக மேற்கு வங்கத்தில் அனைவரும் வியக்க வைக்கும் வகையில் 18 சீட்களை வென்றது. அங்கு மொத்தம் 42 சீட்கள் உள்ள நிலையில், திரிணாமுல் 22இல் வென்றது. அதற்குப் பிறகு 2ஆவது மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சியால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. சிபிஎம் கட்சியால் ஒரு சீட்டில் கூட வெல்ல முடியவில்லை
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications