திருப்பதியில் மின்சாரம் தாக்கி பலியான தாய்,மகன் – குடும்பத்திற்கு 8 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிப்பு!
திருமலை: திருப்பதியில் மின்சாரம் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 8 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த லட்சுமி, தனது கணவர் மற்றும் ஒன்றரை வயது மகன் மகேஷுடன் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதால், லட்சுமியும், குழந்தை மகேஷும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேவஸ்தானம் விசாரணை:
பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் நேற்று விசாரணை நடத்தினார்.
எட்டு லட்சம் இழப்பீடு:
பின்னர் உயிரிழந்த லட்சுமி மற்றும் மகேஷ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 4 லட்சம் வீதம் ரூபாய் 8 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
மேலும் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
தேவஸ்தான அலுவலர்கள்:
அப்போது தேவஸ்தான இணை செயல் அலுவலர் கே.எஸ்.சீனிவாச ராஜு, தலைமை பொறியாளர் சந்திரசேர் ரெட்டி ஆகியோரும் உடனிருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications