கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்... பந்தை எடுக்க முயன்ற 2 பேர் நீரில் மூழ்கி பலி
மும்பை: மும்பையில், கடலோர கழிமுக பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீரில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 2 சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
மும்பை வெர்சோவா பகுதி சிவ்கல்லி தெருவை சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று மாலை அவர்களது வீட்டிற்கு அருகிலிருந்த கடலோர கழிமுக பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கடல் நீருக்குள் பந்து சென்று விட்டது.
அப்பந்தை எடுப்பதற்காக ராஜன் பாஞ்சி ஆப்டே(13) மற்றும் நயன் மனோஜ் தாக்ரே(12) என்ற இரண்டு சிறுவர்கள் கடல் நீரில் இறங்கியுள்ளனர். பந்து ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், பந்தை தொடர்ந்து அவர்களும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். சரிவர நீச்சல் தெரியாத சிறுவர்கள் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டதும் அபயக் குரல் எழுப்பியுள்ளனர்.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் சிறுவர்களை மீட்க போராடியுள்ளனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினரும் சிறுவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால்,சிறுவர்களை காப்பாற்ற இயலவில்லை.
கடற்கரைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications