பீகாரின் முதல் ஓரினச்சேர்க்கைத் திருமணம்: வீட்டை விட்டு வெளியேறி தம்பதிகளான தோழிகள்
பாட்னா: பீகாரில் இளம்பெண்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது பீகாரின் முதல் ஓரினச்சேர்க்கையாளார் திருமணம் எனச் சொல்லப் படுகிறது.
இளம்பெண்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். ஆனால், தோழிகள் இருவரும் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஒரு பெண்ணின் தந்தை தனது மகளை அவளது தோழி வீட்டார் கடத்தியதாக அளித்த புகாரைத் தொடர்ந்து தோழிகள் வீட்டை விட்டு வெளியேறியது வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களின் செல்போன் பேச்சுக்களின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்தைப் போலீசார் கண்டறிந்தனர்.

பீகாரிலுள்ள ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் எனும் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளம்பெண்கள் தங்கி இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கே சென்று பார்த்த போது, இளம்பெண்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விரைவில் கோர்ட்டில் ஒப்படைக்கப் பட உள்ள இந்த இளம்பெண்கள், சிறு வயது முதலே தோழிகளாம். ஒன்றாகவே கல்வியும் கற்கச் சென்றுள்ளார்கள். அப்போது உண்டான தீவிர நட்பே அவர்களைத் திருமணம் வரை கொண்டு போய் விட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications