துப்பாக்கியுடன் கெத்தாக வந்த குஜராத் புள்ளிங்கோ.. கொத்தாக தூக்கி முட்டிபோட வைத்த போலீஸ்
காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் கையில் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்தபடி கெத்தாக வலம் வந்த இரு புள்ளிங்கோக்களை பிடித்த குஜராத் போலீசார், தமிழக போலீசார் ஸ்டைலில் அவர்களை முட்டிபோட வைத்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் ஃபேமஸ் ஆகவேண்டும் என நினைத்து சில இளைஞர்கள் விபரீத விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின்பு காவல்துறையிலும் சிக்கி சின்னாபின்னமாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். உதாரணத்திற்கு கடந்த புத்தாண்டின் போது காவல்துறை வைத்து இருந்த பேரிகார்டுகளை இழுத்து சென்றதோடு போலீசாரை கோவிந்தான் என காலாய்த்து அவற்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அட்ராசிட்டு செய்த இரு சென்னை புள்ளிங்காக்கோக்களை போலீஸார் கண்டறிந்து, அவர்கள் கையில் கட்டுடன் காட்சியளித்து மன்னிப்புக் கோரிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

புள்ளிங்கோ அட்ராசிட்டி
இதே மாதிரி பல அட்ராசிட்டி வேலைகளை செய்வோர் போலீஸ் கைகளில் சிக்கி பிறகு கை கால்களில் மாவு கட்டுடன் காட்சி அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெண்களும் இதுபோன்ற விஷமத்தனங்களிலும் ஈடுபடுவது அதிர்ச்சியாக உள்ளது. குஜராத்

குஜராத்தில் வைரள் வீடியோ
இந்தநிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் குஜராத்திலும் நடைபெற்றுள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் டிக்டாக் பிரபலமாக கூறப்படும் இரு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து பயணித்தனர். அப்போது வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த நபரின் மீது மற்றொரு நபர் தோளில் ஏறி உட்கார்ந்து செய்ததோடு புகை பிடித்தபடி கையில் ஒரு துப்பாக்கியோடு கெத்தாக வலம் வந்தனர்.

வைரலான வீடியோ
இந்த வீடியோவை அவர்கள் நண்பர்கள் படம் பிடித்து தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பகிர அது வேகமாக பரவியது. இதையடுத்து இளைஞர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த சூரத் போலீசார் நீண்ட தேடுதலுக்கு பிறகு இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்
பின்னர் சிறப்பான கவனிப்புக்கு பிறகு காவல் நிலையத்தில் அவர்களை முட்டி போட்டு உட்கார வைத்த சூரத் போலீசார், போலீசார் தமிழக போலீசார் ஸ்டைலில் இனிமேல் இதுபோன்று நாங்கள் செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவர்கள் செய்த சேட்டை வீடியோவை விட போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications