For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஐஎஸ் ஸ்டைல்"..அந்த வீடியோவை பார்க்காதீங்க! உதய்ப்பூர் படுகொலையில் சர்வதேச லிங்க்?.. என்ஐஏ பரபரப்பு

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற டெய்லரின் படுகொலைக்கு பின் தீவிரவாத இயக்கங்களின் ஸ்டைல் இருப்பதாகவும், இதற்கு பின் ஐஎஸ் போன்ற இயக்கங்களின் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் என்ஐஏ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Udaipur படுகொலை நடந்தது என்ன? NIA KanhaiyaLal மனிதம் தேவை..மதவெறி இல்லை

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஹாதி போல் பகுதியில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்த கன்ஹையா லால் என்ற நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சமீபத்தில்.. பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

     அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா? அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?

    இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு உலகம் முழுக்க கடும் விமர்சனங்களை சந்தித்தது.

    பேஸ்புக் போஸ்ட்

    பேஸ்புக் போஸ்ட்

    சர்வதேச நாடுகள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்த கன்ஹையா லாலின் மகன் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் போஸ்ட் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு நுபுர் சர்மா சில இஸ்லாமியர்களின் போஸ்டுகளில் கன்ஹையா லாலின் மகன் சில கமெண்டுகளை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் இது தொடர்பாக கன்ஹையா லாலிடம் விசாரித்து உள்ளனர்.

     கொலை

    கொலை

    அதன்பின்பே கன்ஹையா லாலுக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனது மகனிடம் இதை பற்றி விசாரித்து உள்ளார். இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் கன்ஹையா லாலின் கடைக்கு இரண்டு இஸ்லாமியர்கள் வந்துள்ளனர். துணி தைக்க கொடுப்பது போல வந்த இவர்கள், கன்ஹையா லாலை அங்கேயே மோசமாக தாக்கி உள்ளனர். அதன்பின் அங்கேயே அவரை அடித்து, உதைத்து பின்னர் கூர்மையான கத்தியால் கழுத்தில் வெட்டி உள்ளனர்.

    வீடியோ

    வீடியோ

    இதில் கடுமையாக காயம் அடைந்தவர் அங்கேயே பலியானார். கன்ஹையா லால் கொலை செய்யப்படும் வீடியோவும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுக்க இந்த விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையை செய்த முகமது ரியாஸ், கோஸ் முகமது இருவரும் இந்த வீடியோவை தங்கள் பேஸ்புக்கில் போட்டு பெருமைப்பட்டுள்ளனர். அதேபோல் பிரதமர் மோடி , நுபுர் சர்மா ஆகியோருக்கும் இவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    வீடியோ பார்க்க வேண்டாம்

    வீடியோ பார்க்க வேண்டாம்

    இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோவை மக்கள் யாரும் பார்க்க வேண்டாம். அதை யாருக்கும் பகிர வேண்டாம் என்று ராஜஸ்தான் போலீஸ் தெரிவித்துள்ளது. அதோடு மீடியாக்கள் இதை ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்றும் போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் என்ஐஏ விசாரணை நடத்த உள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு தற்போது உதய்பூர் சென்றுள்ளது.

    என்ஐஏ

    என்ஐஏ

    இது தொடர்பாக என்ஐஏ வட்டாரங்கள் நியூஸ் 18 ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்த தகவலில், இந்த கொலை சர்வதேச நாடுகளில் நடக்கும் சில கொலைகள் போல உள்ளன. கத்தி, கொலை செய்யப்பட்ட விதத்தை பார்க்கும் போது ஐஎஸ் ஸ்டைல் தாக்குதல் போல உள்ளது. இதில் உபாவின் கீழ் வழக்கு பதியப்படும். பல முனைகளில் விசாரணை நடத்தப்படும். கொலைக்கு பின் இருக்கும் பெரிய பின்னணியை கொண்டு வருவோம்.

    ஐஎஸ் ஸ்டைல்

    ஐஎஸ் ஸ்டைல்

    சர்வதேச லிங்க் இதில் இருப்பதாக சந்தேகப்படுகிறோம். இதன் காரணமாக வழக்கு என்ஐஏவிற்கு மாற்றப்பட உள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும். கொலை குற்றவாளிகளின் பேஸ்புக் கணக்கு, அவர்கள் யாரிடம் பேசி உள்ளனர். அவர்கள் உரையாடிய நபர்கள் யார் என்றெல்லாம் விசாரணை நடத்தப்படும், என்று என்ஐஏ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    English summary
    Udaipur incident: NIA pitches in the investigation, probes for the international links. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற டெய்லரின் படுகொலைக்கு பின் தீவிரவாத இயக்கங்களின் ஸ்டைல் இருப்பதாகவும், இதற்கு பின் ஐஎஸ் போன்ற இயக்கங்களின் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் என்ஐஏ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X