துரதிர்ஷ்டவசமாக வன்முறை நடந்துவிட்டது.. மணிப்பூரில் கவலையை பகிர்ந்து பிரதமர் மோடி
இம்பால்: ‛‛மணிப்பூர் நம்பிக்கை மற்றும் இலக்கை நோக்கிய ஆசைகள் கொண்ட பூமி. துரதிர்ஷ்டவசமாக வன்முறை நிழல் படிந்து விட்டது. வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தேன். மணிப்பூரில் நம்பிக்கையின் புதிய விடியல் உதயமாகி வருகிறது. மத்திய அரசு மணிப்பூர் மக்களுடன் எப்போதும் இருக்கும். வளர்ச்சி நடைபெற அமைதி என்பது அவசியம். அமைதியின் பாதையில் மக்கள் முன்னேறி சென்று ஒவ்வொருவரின் கனவுகளையும் நிறைவேற்ற அனைத்து அமைப்புகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்று பிரதமர் மோடி பேசினார்.
மணிப்பூரில் குக்கி - மைத்தேயி மக்களிடையே நடந்த மோதல் வன்முறையானது. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் ஓராண்டு வரை வன்முறை நீடித்தது. முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி கலைக்கப்பட்டது.
தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருகிறது. வன்முறை நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மணிப்பூரில் பிரதமர் மோடி
இந்நிலையில் தான் வன்முறைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றார். மணிப்பூரில் மொத்தம் ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அவர் தொடங்கி வைத்தார். சுரசந்த்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களையும், இம்பாலில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
துரதிர்ஷ்டவசமானது
மேலும் வன்முறையில் பாதிக்கப்பட்டு அரசு முகாம்களில் தங்கி உள்ளவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக சுரசந்தப்பூரில் பிரதமர் மோடி பேசியதாவது: மணிப்பூர் நிலம் நம்பிக்கை மற்றும் இலக்கை நோக்கி ஆசைகள் கொண்ட பூமி. துரதிர்ஷ்டவசமாக மணிப்பூரில் வன்முறை நிழல் படிந்து விட்டது.
வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தேன். மணிப்பூரில் நம்பிக்கையின் புதிய விடியல் உதயமாகி வருகிறது. மத்திய அரசு மணிப்பூர் மக்களுடன் எப்போதும் இருக்கும். வளர்ச்சி நடைபெற அமைதி என்பது அவசியம்.
வேண்டுகோள் வைத்த மோடி
கடந்த 11 ஆண்டுகளில் மணிப்பூரில் பல மோதல்கள், பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதியின் பாதையை தேர்வு செய்து வளர்ச்சிக்கு முன்னுரியைம அளித்துள்ளனர். சமீபத்தில் பல குழுக்களுடன் ஒப்பந்தம், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் திருப்தி அடைந்துள்ளோம்.
பரஸ்பர புரிதலுடன் அமைதியை நிலைநாட்டுவதன் ஒரு பகுதியாக இந்த பணிகள் செய்யப்பட்டுள்ளது. அமைதியின் பாதையில் மக்கள் முன்னேறி சென்று ஒவ்வொருவரின் கனவுகளையும் நிறைவேற்ற அனைத்து அமைப்புகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்றார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications