8 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு... பெண்களுக்கு ஆறுதலான ஒரே அறிவிப்பு!
இலவச கேஸ் இணைப்பு தரும் திட்டம் 5 கோடி குடும்பங்களில் இருந்து 8 கோடி குடும்பங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: அடுப்பங்கறையில் புகையில் வெந்து தணியும் பெண்களின் துயர் துடைக்க இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 5 கோடி குடும்பத்தினருக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் ஏழைக் குடும்பத்தினருக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல்கள் வரஉள்ள சமயத்தில் ஏழைப்பெண்களின் ஓட்டுகளை கவரும் விதமாக இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய எரிசக்தித் துறை கோரிக்கை வைத்தது.
3 ஆண்டுகளில் 5 கோடி குடும்பத்தினருக்கு இலவச எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர்கள் வழங்குவதற்கு தான் திட்டமிடப்பட்டிருந்தது. முதல் 2 ஆண்டுகள் சுமார் 1.5 கோடி பயனாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு 2016-17ம் நிதியாண்டில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு வைப்புத் தொகை
இதுவரை 3.35 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சார்பில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசே சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டருக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையை அளிக்கிறது, ஆனால் மாதா மாதம் சிலிண்டருக்கான தொகையை வாடிக்கையாளர் தான் வழங்க வேண்டும்.

யார் பயன்பெறுவார்கள்?
எண்ணெய் நிறுவனங்கள் மாநில அளவில் எல்பிஜி விநியோகத்தை அதிகரிப்பதற்கான நெட்வொர்க்கை மார்ச் 2019க்குள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. அதிகப்படியான மக்கள் இன்றும் பழைய விறகு அடுப்புகளையே பயன்படுத்தும் பகுதியில் இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எந்த மாநிலத்திற்கு அதிக முன்னுரிமை
குறிப்பாக உத்திரபிரதேசம், பீஹார், மேற்குவங்கம், ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களே இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தின் புதிய பயனாளர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. இது தவிர மலைக் கிராம மக்களுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

பெண்களுக்கான ஒரே அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற பெண்களுக்கான பயனுள்ள அறிவிப்பு என்றால் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும். மற்றபடி சுயஉதவிக் குழுக்களுக்கான கடன உதவித் தொகை ரூ. 75 ஆயிரம் கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications