எவ்வளவு கஷ்டம்! இது சாதாரண விஷயமல்ல! உக்ரைன் விவகாரத்தில் மோடியை பாராட்டிய மத்திய அமைச்சர்!
ஹமீர்பூர்: ‛‛போர் நடக்கும் உக்ரைனில் இருந்து மாணவர்களை இந்தியாவுக்கு மீட்டு வருவது சாதாரண விஷயமல்ல. இதை தான் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக செய்துள்ளார்'' என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் அங்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு முடிவு எடுத்தது. போர் துவங்கிய பிப்ரவரி 24 முதல் உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் இந்திய மாணவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஆபரேஷன் கங்கா
இதையடுத்து உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள் ‛ஆபரேஷன் கங்கா' மூலம் விமானங்களில் மீட்கப்படுகின்றனர். அதாவது அண்டை நாடுகளான ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புத்தாபெஸ்ட், போலந்தின் ரிசோ, சுலோவாகியாவின் கோசிஸ் நகர்களில் இருந்து விமானங்களில் தாயகம் திரும்புகின்றனர்.

ஒருங்கிணைப்பு குழு
மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் நேற்றைய நிலவரப்படி உக்ரைனில் இருந்து 17,400 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான மீட்பு பணிகளை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி ஹங்கேரியிலும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவிலும், கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவிலும், வி.கே.சிங் போலந்திலும் ஒருங்கிணைப்பு செய்து வருகின்றனர்.

சாதாரண விஷயமல்ல
இந்நிலையில் தான் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான அனைத்து வசதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி செய்து கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் பேசியுள்ளார். போருக்கு நடுவே மாணவர்களை மீட்பது, மாணவர்கள் வெளியேற சிறப்பு வழியை ஏற்படுத்தி கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

எதிர்க்கட்சிகள் கேலி
இதை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார். மத்திய அமைச்சர்களையும் உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தை எதிர்க்கட்சிகள் கேலி செய்தன. தற்போதும் மத்திய அரசை குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் கொரோனா பேரிடர் காலத்தில் ஜன்தன் வங்கி கணக்குகளில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்காக 20.5 கோடி நிதி உதவி செய்யப்பட்டது'' என்றார்.முன்னதாக உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன.
Recommended Video

பிரதமர் குற்றச்சாட்டு
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கையில் ‛‛உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டும் சித்தாந்தத்தை மட்டும் எதிர்க்கட்சிகள் கொண்டுள்ளன. இந்த விவகாரத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் லாபம் தேடுகின்றன'' என குற்றம்சாட்டி இருந்தார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‛‛உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு உத்தர பிரதேச தேர்தலில் சாதகமான சூழலை ஏற்படுத்தும்'' என நம்பிக்கை தெரிவித்திருந்தார். மத்திய விமான போக்குவரத்து துறையின் நேற்றைய நிலவரப்படி 17,400 பேர் உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications