சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம்... மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அதிரடி
டெல்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, பெண்கள் இதற்கு முன்னரும் அய்யப்பன் கோவிலுக்குள் போகவில்லை என்பதற்கான ஆதாரங்களைத் தர முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவாதம் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் இவ்வழக்கில் மத நம்பிக்கையில் அரசு தலையிட முடியாது என கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா, அனைத்து மத வழிபாட்டு தலங்களில் இன ரீதியிலோ, பாலினம் சார்ந்த பாகுபாடோ இருக்கக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் கருத்து எனக் கூறியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற அமைச்சர் மகேஷ் சர்மா இந்த கருத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications