நெற்றியில் 3 முத்தம்.. வகுப்பறையில் டீச்சருக்கு பொட்டு வைத்து திருமணம் செய்த மாணவர்.. காரணம் பாருங்க
கொல்கத்தா: வகுப்பறையை திருமண மண்டபமாகவும், மாணவரும், ஆசிரியையும், மணமக்களாகவும் காட்சி தரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. அந்த பேராசிரியை, தன்னுடைய மாணவரை முறைப்படி மணந்து கொள்ளும் திருமண வீடியோ இதுவாகும்.
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹரிங்கடா என்ற பகுதி.. இங்கு மவுலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது..

பல்கலைக்கழகம்: இந்த பல்கலைக்கழகத்தில், பேராசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார்.. இவர், அங்கு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரை திருமணம் செய்து கொள்கிறார்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
பேராசிரியை, அச்சுஅசல் மணப்பெண் போலவே உடையணிந்து உள்ளார்.. முதலாம் வருட மாணவர், மாப்பிள்ளை போல அலங்காரம் செய்துள்ளார்.. இவர்கள் இருவருக்கும், இந்து - வங்காள முறைப்படி பல்வேறு சடங்குகள் நடக்கின்றன.. குங்குமம் வைத்தல், மாலை மாற்றுதல் என அனைத்துவிதமான திருமண சடங்குகளும் நடந்து முடிந்த நிலையில், இருவருமே திருமணம் செய்து கொண்டனர்.
வீடியோ அதிர்ச்சி: இந்த வீடியோ வெளியானதுமே, இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.. கடுமையான கண்டனங்களும் இணையத்தில் எழுந்தன.. எனவே, இதுபற்றி விசாரணை செய்ய 3 பேராசிரியைகளை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணை முடியும் வரை பணிக்கு வர வேண்டாம் என சொல்லி, அந்த பெண் பேராசிரியைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதாம்.. அந்த மாணவரும் வகுப்புகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி சொல்லும்போது, "அந்த பேராசிரியை ஒழுக்கக்கேடான விஷயம் எதிலும் ஈடுபடவில்லை. அது முற்றிலும் பாடம் சார்ந்து நடத்தப்பட்ட விஷயம் என்று சொன்னார்.. இருந்தாலும், வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், அவரை விடுமுறை எடுத்து கொள்ளும்படி கூறியிருக்கிறோம். இந்த விவகாரம் பற்றி குழு விசாரணை நிறைவடையும் வரை, அந்த மாணவரையும் வகுப்புக்கு வரவேண்டாம் என கூறியிருக்கிறோம்" என்றார்.
ஆவணப்படம்: பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையில் (psychology department) இந்த திருமணம் நடந்துள்ளது. பேராசிரியை மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாம் ஆண்டு மாணவர் அவருக்கு மாப்பிள்ளையாக வந்து நெற்றியில் திலகமிடுகிறார். பதிலுக்கு மணப்பெண்ணும், மாப்பிள்ளைக்கு திலகம் இடுகிறார். மற்ற சடங்குகள் நடக்கின்றன. இதை வகுப்பறையில் இருந்தவர்களே மகிழ்ச்சியுடன் வீடியோ எடுத்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம், உளவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு ஆவணப்படம் காட்டுவதற்காக ஆசிரியர் இப்படி நடந்து கொண்டாராம்.. எனினும் 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ விவகாரத்தின் அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை..
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications