உ.பி.யில் 1,000 டன் தங்க தங்கப் புதையல்... தோண்டும் பணி தொடங்கியது!
உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே 1,000 டன் தங்கப் புதையலைத் தேடுவதற்காக அகழாய்வுப் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே மன்னர் ராம்பக்சிங்கின் கோட்டை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. இந்த மன்னர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்டார்.

அண்மையில் மன்னரின் கோட்டை இருக்கும் கெடா கிராமத்து சாது ஒருவரின் கனவில் மன்னர் ராம்பக்சிங் தோன்றி, கோட்டையில் 1,000 டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறியுள்ளார். இதை சாது சோபன் சர்கார் பலரிடம் சொல்லியும் எவரும் நம்பவில்லை.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்திடம் நேரில் எடுத்துச் சொல்லி நம்ப வைத்துள்ளார் சாது சோபன் சர்கார். பின்னர் தங்கப் புதையலை தோண்ட தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் இன்று காலை 7.30 மணிக்கு சாது சோபன் சர்கார் சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் 8 மணியளவில் புதையலைத் தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. மாலை வரை தொடர்ந்து தோண்டப்படும். அப்பகுதியில் உள்ளூர்வாசிகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே புதையல் தங்களுக்கே சொந்தமானது என்று மன்னரின் வாரிசுகள் உரிமை கோரினர். ஆனால் உத்தரப்பிரதேச மாநில அரசோ அது அரசாங்கத்துக்குத்தான் சொந்தம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications