உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி வெற்றிக்காக தொண்டர்கள் யாகம்
லக்னோவில், சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் தங்களது கட்சி வெற்றிக்காக யாகம் நடத்தினர். அதேநேரம் உ.பி பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், 3ல் 2 பங்கு பலத்தோடு உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடிக்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் சமாஜ்வாதி கட்சியினர் லக்னோவில் யாகம் வளர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

உ.பி தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாகவும், இரண்டாவது இடத்தை சமாஜ்வாதியும் பிடிக்கும் என எக்சிட் போல்கள் கூறுகின்றன. இருப்பினும் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காவிட்டால் பகுஜன் சமாஜ் கட்சியோடு இணைந்து ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தலைநகர் லக்னோவில், சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் தங்களது கட்சி வெற்றிக்காக யாகம் நடத்தினர். அதேநேரம் உ.பி பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், 3ல் 2 பங்கு பலத்தோடு உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications