உ.பி: புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பு சட்டவிரோதம்- ரூ.10 லட்சம் தர உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜியில் புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின், இந்த புல்டோசர் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. தற்போது உ.பி. அரசால் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உ.பி. மாநிலத்தில் புல்டோசர்கள் மூலம் வீடுகள், கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜால் பூயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்: பிரக்யாராஜ் மேம்பாட்டு ஆணையமானது வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளுவது மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது. பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன.

உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை இப்படி இடித்து தள்ளுவது ஏற்க முடியாதது. இத்தகைய செயல்பாடுகள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
முன்னதாக அலகாபாத் உயர்நீதிமன்றமானது, புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பதற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றம், இதேபோல கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தது.
மேலும் எந்த ஒரு அவகாசமும் தராமலேயே 24 மணிநேரத்தில் புல்டோசர் மூலம் வீடுகளை இடித்து தள்ளியது கடும் கண்டனத்துக்குரியது. அத்துடன் மேல்முறையீடு செய்யவும் உரிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றும் காட்டமாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், உத்தரப்பிரதேச மாநில அரசு சட்ட நடைமுறைகளை எல்லாம் பின்பற்றாமல் செயல்படுகிறது; இதனை ஏற்க முடியாது; இத்தகைய செயல்களை ஒரு முறை பொறுத்துக் கொண்டால் இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் தொடரும் எனவும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications