உ.பி.யில் பயங்கரம்: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 2 பேர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 80 வயது மூதாட்டியை 2 மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது மகளை பார்க்க அகமதுகார் நகரில் இருந்து கதாரா கேரா கிராமத்திற்கு கடந்த சனிக்கிழமை மதியம் கிளம்பியுள்ளார். அவர் பேருந்திற்காக காத்திருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் அவருக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். எங்களுடன் பைக்கில் வாருங்கள், உங்களை உங்களின் மகளின் வீட்டில் விட்டுவிடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மூதாட்டியும் அவர்களுடன் பைக்கில் ஏறியுள்ளார். ஆனால் அந்த இருவரும் அவரை பூங்காவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து மூதாட்டி என்று கூட பார்க்காமல் அவரை அந்த இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் மூதாட்டியை ஷிகார்பூர் நகர் அருகே சாலையோரம் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். மயக்கத்தில் ரத்தப் போக்குடன் சாலையோரம் கிடந்த மூதாட்டியை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மீரட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே மூதாட்டியின் மகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications