வரப்போகும் தேர்தல் ஓட்டுக்கானது இல்லை.. "சனாதன தர்மம்" விவகாரத்தை ம.பி பிரசாரத்தில் எடுத்த ஸ்மிரிதி
போபால்: வரப்போகும் தேர்தல் ஓட்டுக்கானது இல்லை என்றும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான யுத்தம் என்றும் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசினார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல், பாஜகவும் ஆட்சியை தக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தேர்தல் அனல் அங்கு தகிக்க ஆரம்பித்து விட்டது.

ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் அடிக்கடி மத்திய பிரதேசத்திற்கு விசிட் அடித்து விட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மத்திய பிரதேசத்தின் ஷியோர் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, ஸ்மிரிதி இரானி பேசியதாவது:-
வரவிருக்கும் தேர்தல் ஓட்டுக்கானது இல்லை. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான யுத்தம். ஆங்கிலேயர்கள் இங்கு வந்து விட்டு சென்றார்கள். முகலாய சாம்ராஜயம் முடிவுக்கு வந்தது. ஆனால், நாம் (சனதான தர்மம்) இங்கு இருக்கிறோம். நாளையும் தொடர்ந்து இருப்போம். இது ஒரு சாதாரண தேர்தல் யுத்தமாக இருக்க போவது இல்லை. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்பவர்களின் கூட்டணி உள்ளது.
நாம் வாழும் வரை நமது மதத்தை பாதுகாப்போம் என்பதே நமது உறுதிப்பாடு ஆகும்" என்றார். தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் 14 பேரின் நிகழ்ச்சியில் பங்கேற்க போவது இல்லை என்று புறக்கணித்து இருப்பது பற்றி பேசிய ஸ்மிரிதி இரானி, காந்தி குடும்பத்தினர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ஏன் அச்சப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.
பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் எப்படி போட்டியிட போகிறார்கள். வெறும் பெயரை மாற்றுவதால் மட்டும் நரி சிங்கமாகிவிடாது" என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சை திரித்து வட இந்தியாவில் பாஜக தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியே, உதயநிதி ஸ்டாலின் பேச்சை விமர்சிக்கும் வகையில், கடுமையாக சாடி பேசினார்.
இந்த நிலையில், தான் தற்போது மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்திலும் பாஜக , சனாதன விவகாரத்தை இந்தியா கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியே ஸ்மிரிதி இரானியும் தனது பேச்சில் சனாதனம் குறித்து இழிவாக பேசிவிட்டதாக கடுமையாக சாடி பேசினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications