மோடிதான் முதல் இந்து பிரதமர் என்று கூறினாரா ராஜ்நாத்சிங்? லோக்சபாவில் பெரும் அமளி!
டெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி கூறிய ஒரு குற்றச்சாட்டால் லோக்சபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.
லோகக்சபாவில் இன்று சகிப்புத்தன்மை பற்றிய விவாதம் தொடங்கி வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலிம் பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி பல மறைமுக இந்துத்துவா கொள்கைகளை வைத்துள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் எதுவும் மறைமுகம் கிடையாது. வெளிப்படையாகவே அந்த கொள்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குறிய வகையில், யாராவது ஏதாவது பேசினால், அதை கண்டுகொள்ள தேவையில்லை என்ற வகையில் அரசு பதில் சொல்லிவருகிறது. கருத்து கூறுவோர் யார், அமைச்சர்களா, எம்பிக்களா, மக்கள் பிரதிநிதிகளா.. அவர்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

அவுட் கோயிங்
பிரதமர் வெறுமனே அவுட்-கோயிங் (வானொலி உரை) அழைப்புகளை மேற்கொண்டு வருகிறார். இன்கம்மிங் அழைப்புகளுக்கும் வாய்ப்பு கொடுத்தால்தான், உண்மை தெரியும்.

இந்து பிரதமர்
800 வருடங்களில் முதல்முறையாக, ஒரு இந்து பிரதமர் இந்தியாவை ஆள்கிறார் என்று, அவுட்லுக் இதழிடம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் இப்படி கூறியிருக்க கூடாது. இவ்வாறு சலீம்பேசியபோது, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ராஜ்நாத் மறுப்பு
குறுக்கிட்ட ராஜ்நாத்சிங் "எந்த ஒரு உள்துறை அமைச்சர் இந்த வார்த்தையை கூறியிருந்தாலும், அது பெரும் தவறாகும். ஆனால், என்மீது இப்படியொரு பெரும் குற்றச்சாட்டு தூக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வார்த்தையை, ராஜ்நாத்சிங் கூறியதாக கூறினால், சிறுபான்மையினர் கூட நம்ப மாட்டார்கள். நான் அப்படி ஒரு வார்த்தையை அந்த பத்திரிகைக்கு கூறவேயில்லை" என தெரிவித்தார்.

நீக்கம்
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ராஜ்நாத்சிங் கூறியதாக பத்திரிகையில் வந்த வாசகங்களை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அரிவித்தார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications