மார்க் போடாத பேராசிரியரை பழிவாங்க பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு மிரட்டல் விடுத்த 2 எம்.டெக். மாணவர்கள்
பெங்களூர்: பெங்களூரில் கல்லூரி பேராசிரியரை பழிவாங்க 2 மாணவர்கள் அவரது கம்ப்யூட்டரில் இருந்து போலி ஐடி மூலம் பெங்களூர் விமான நிலையத்திற்கு தாக்குதல் மிரட்டல் விடுத்து சிக்கியுள்ளனர்.
பெங்களூர் விமான நிலையத்தை தாக்கப் போவதாக கடந்த மார்ச் மாதம் 22 மற்றும் மே 6ம் தேதி இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெங்களூரில் உள்ள ஈஸ்ட் வெஸ்ட் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரின் பெயரில் அவரது கம்ப்யூட்டரில் இருந்து மிரட்டல் இமெயில் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தியதில் இமெயில்களுக்கும், பேராசிரியருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும், அதே கல்லூரியில் எம்.டெக். படிக்கும் மாணவர்கள் ராகவேந்திரா மற்றும் ஹொய்சாலா ஆகியோரின் வேலை என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,
அந்த பேராசிரியர் எப்பொழுது பார்த்தாலும் மாணவிகளுக்கு தான் அதிக மதிப்பெண்கள் அளிக்கிறார். எங்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் அளிக்கிறார். இதனால் அவரை பழிவாங்க அவரது கம்ப்யூட்டரை பயன்படுத்தி அவர் பெயரில் போலி இமெயில் ஐடி உருவாக்கி விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தோம் என்றனர்.
இதையடுத்து போலீசார் அந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications