For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனிமேல் மெட்ரோ ரயிலில்தான் போவாராம் வெங்கையா நாயுடு!

Google Oneindia Tamil News

டெல்லி: இனிமேல் தான் மெட்ரோ ரயிலிலேயே பயணப்படவுள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இதை நேற்று முதல் அவர் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். நேற்று அவர் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

இனிமேல் மெட்ரோவில்தான்

இனிமேல் மெட்ரோவில்தான்

அப்போது அவர் கூறுகையில், இனிமேல் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோவில்தான் நான் பயணம் செய்வேன். எனது அமைச்சரவை சகாக்களிடமும் இதே அட்வைஸைக் கொடுக்கவுள்ளேன்.

நவீன இந்தியாவின் அடையாளங்கள்

நவீன இந்தியாவின் அடையாளங்கள்

இவையெல்லாம் நவீன இந்தியாவின் அடையாளங்கள். இதை நாம் சரியாகப் பயன்படுத்தினால் சாதாரண மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சாதாரண மக்கள்தான் நமக்கு முக்கியம்.

பெருமை அடைகிறேன்

பெருமை அடைகிறேன்

மெட்ரோ பெருமையின் அடையாளம். டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தை நினைத்து நான் பெருமை அடைகிறேன் என்றார் நாயுடு.

சிவாஜி ஸ்டேடியம் நிலையத்திற்கு

சிவாஜி ஸ்டேடியம் நிலையத்திற்கு

நேற்று காலை 8.50 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் ஏறினார் வெங்கையா. ஹைதராபாத்திலிருந்து டெல்லி வந்த அவர் அங்கிருந்து சிவாஜி ஸ்டேடியம் நிலையத்திற்கு மெட்ரோ ரயிலிலேயே வந்தார்.

பயணிகளுடன்

பயணிகளுடன்

ரயிலில் பயணம் செய்த பயணிகளுடன் சகஜமாகப் பேசினார். பயணிகளும் வெங்கையாவிடம் இயல்பாகப் பேசினர். தங்களது குறைகள், குறித்தும் பேசினர்.

கட்டணம் ஜாஸ்தி

கட்டணம் ஜாஸ்தி

பலர் கட்டணம் ஜாஸ்தியாக இருப்பதாக கூறினர். சிலர் சர்வீஸ் குறைவாக உள்ளதாக கூறினர். பலர் சேவையை விரிவுபடுத்த ஆலோசனை தெரிவித்தனர்.

English summary
Urban Development Minister M. Venkaiah Naidu who travelled by the Airport Express Metro on Monday said he would always use the service from now on. The minister said he will also ask his cabinet colleagues to travel by the Airport Express Metro, saying such services, if put to optimal use, will make travelling convenient for people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X