உ.பி.,யில் ரயில் தடம்புரண்டு விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. ரேபரேலி அருகே ஹர்சந்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ரயில் வேகம் எடுத்த சில நிமிடத்தில் தடம்புரண்டுள்ளது. 6 க்கும் மேற்பட்ட பெட்டிகள் இதனால் கவிழ்ந்துள்ளது.
சுமார் ஐந்து மீட்டர் இந்த பெட்டிகள் இப்படியே தரையில் உரசியபடி சென்றுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். அதன்பின் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரயிலுக்கு அடியில் எத்தனை பேர் சிக்கி இருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications