மலிவு விலையில் தரமான மருந்துகள்.. பெரும் நிறுவனங்களுடன் கைகோர்க்கும் உ.பி! அசத்தும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உயர்தர மற்றும் மலிவு விலையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உத்தரப் பிரதேச அரசு பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக உயர்தர மற்றும் மலிவு விலையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை உ.பி அரசு மேற்கொண்டிருக்கிறது. இது குறித்து ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "லலித்பூரில் உள்ள மருந்து பூங்காவை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) போன்ற பெரிய நிறுவனங்களுடன் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மலிவு விலையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் கிடைக்கும். இந்த திட்டத்திற்காக ரூ.1,000 வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல 60-70 உற்பத்தி அலகுகள் தொடங்கப்பட இருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தை சுகாதாரத கட்டமைப்பில் வலுப்படுத்த யோகி ஆதித்யநாத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி எனும் இலக்கை இம்மாநிலம் விரைவில் எட்ட இருக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே தற்போது மேற்குறிப்பிட்ட மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications