கான்ஸ்டபிள் உடன் பெண் போலீஸ் ‘ரொமான்ஸ்’.. அதுவும் கண்ட்ரோல் ரூமிலேயே.. அதிர்ச்சி வீடியோ

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ்காரர்களே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து 'ரொமான்ஸ்' செய்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள நிலையில் பெண் போலீஸ் - கான்ஸ்டபிள் தொடர்பான 'ரொமான்ஸ்' வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் படேல். இவர் கடந்த 2018 ம் ஆண்டில் போலீஸ் பணியில் சேர்ந்தார். கான்ஸ்டபிளாக இருக்கும் இவர் ஓரை கோட்வாலி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகிறார்.

Uttar Pradesh woman

கடந்த 24ம் தேதி நைட் ஷிப்ட் பணியில் கான்ஸ்டபிள் அரவிந்த் படேல் இருந்தார். இந்த கட்டுப்பாட்டு அறையில் இளம்பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பயிற்சி பணியில் உள்ளார். கட்டுப்பாட்டு அறை பணி என்பதால் இருவரும் போலீஸ் உடையில் இல்லை. சாதாரண உடையில் இருந்தனர்.

இவர்கள் 2 பேரும் ரொமான்ஸ் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. கான்ஸ்டபிள் அரவிந்த் படேல் தனது சீட்டில் இருந்து பணியாற்றினார். அப்போது அவருக்கு பின்னால் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பெண் கான்ஸ்டபிள் வருகிறார். சீட்டுக்கு பின்னால் நின்று கான்ஸ்டபிள் அரவிந்த் படேலுக்கு முத்தம் கொடுத்து கட்டியணைக்கிறார். பிறகு அந்த போலீஸ்காரர் சீட்டில் இருந்து எழுந்து நிற்கிறார். அப்போதும் அவர் அருகே சென்ற பெண் போலீஸ் ரொமான்ஸ் செய்கிறார்.

அதன்பிறகும் கான்ஸ்டபிள் பின்னால் சென்று அவருக்கு முத்தம் கொடுத்து லீலையில் ஈடுபடுகிறார் அந்த பெண் போலீஸ். இது அனைத்தும் போலீஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது சர்ச்சையை கிளப்பியது. சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்த கோரிக்கையை தொடர்ந்து கான்ஸ்டபிள் அரவிந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை எஸ்பி வினய் குமார் சிங் பிறப்பித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சியின்படி பார்த்தால் பெண் போலீஸ் தான், கான்ஸ்டபிள் அரவிந்த் படேலுக்கு முத்தம் கொடுத்து கட்டியணைக்கிறார்.

ஆனால் கான்ஸ்டபிள் அரவிந்த் படேல் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் போலீஸ் மீது இன்னும் எடுக்கவில்லை இதனை பலரும் கண்டித்து வருவதோடு, பெண் போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி எஸ்பி வினய் குமார் சிங்கிடம் கேட்டபோது, ''காவல்துறையில் ஒழுக்கம் மிகவும் முக்கியம். பணி நேரத்தில் ஒழுங்கின்றி அல்லது தவறான நடத்தை தொடர்பாக புகார்கள் இருப்பின் அது தீவிரமாக எடுத்து கொள்ளப்படும். தற்போது இந்த விவகாரம் பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விசாரணை அறிக்கை அடிப்படையில பெண் பயிற்சி கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+