மேகக்கூட்டத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்து: உத்தரகாண்ட் முதல்வர் படுகாயம்
டெல்லி: டெல்லி அருகே மேகக் கூட்டத்தில் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
ஹரீஷ் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் சண்டிகரில் இருந்து டெல்லி சென்ற போது, மேகக்கூட்டத்தில் மோதி விபத்திற்குள்ளானது. பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினர்.

அப்போது, ஹெலிகாப்டரின் மேற்கூரை மீது தலை மோதியதால் ஹரீஷ் ராவத் படுகாயமடைந்தார். மேகக் கூட்டத்தில் மோதியதால் ஹெலிகாப்டர் 2,3 முறை குலுங்கியதாகவும் ஒவ்வொரு முறை குலுங்கிய போதும் முதல்வரின் தலை, மேற்கூரையில் மோதியதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அவரது பாதுகாவலர் தெரிவித்தார்.
கழுத்தில் எலும்பு முறிவு மற்றும் முதுகிற்கு அருகில் அவருக்கு காயமேற்பட்டதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மோசமான வானிலையே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சீட் பெல்ட் அணியாததால்...
பயணத்தின் போது ஹரீஷ் ராவத் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததும் அவரது காயத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. சிலதினங்களுக்கு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த கோபிநாத் முன்டேவின் மரணத்திற்கு சீட் பெல்ட் அணியாதது முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications