விரைவில் பொதுசிவில் சட்டம்.. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த உத்தராகண்ட் அரசு
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அம்மாநில அரசு குழு அமைத்துள்ளது.
உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்ட புஷ்கர் சிங் மறுநாளே பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என அவர் உறுதியளித்தார்.
இதில் முக்கிய வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை நிச்சயம் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்து இருந்தார்.

உத்தராகண்ட் முதலமைச்சர் பேச்சு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பஞ்சன்யாவின் நிகழ்வு ஒன்றில் புஷ்கர் சிங் தாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பொது சிவில் சட்டத்தை கொண்டு வர விரைவில் குழு அமைக்க இருக்கிறோம். சட்ட நிபுணர்களை கொண்ட அந்த குழு சமர்பிக்கும் மசோதாவை அமல்படுத்துவோம். உத்தராகண்ட் ஒரு தெய்வ பூமி. எங்களைபோல் மற்ற மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

விரைவில் பொது சிவில் சட்டம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். உத்தராகண்ட் மாநிலத்தில் விரைவில் ரோஹிங்கியாக்கள் மற்றும் ஊடுருவிகள் குறித்து கண்டறிய சிறப்பு குழு அமைத்துள்ளேன். இதற்கான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு குற்றவாளிளை போலீஸ் கைது செய்யும். மதமாற்றத் தடைச் சட்டத்தையும் வலுவாக அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்." என்றார்.

குழு அமைப்பு
இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவும் அதை சரி பார்க்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லை நிர்ணய ஆணைய தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு அமைத்து இருக்கிறது. ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோலி, சமூக ஆர்வலர் மனு கவுர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்ருகன் சிங், பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா தங்க்வால் உள்ளிட்டோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

2009-ல் அறிவித்த அத்வானி
இந்தியாவிலேயே பொதுசிவில் சட்டத்தை முதன்முதலில் கொண்டு வர இருக்கும் மாநிலம் உத்தராகண்ட்தான் என புஷ்கர் சிங் தாமி அப்போது தெரிவித்து இருந்தார். கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போதே பாஜக வெற்றிபெற்றால் நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அத்வானி உறுதியளித்தார். 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் பாஜக பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது.

பொதுசிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
இந்த நிலையில், இந்த சிறப்பு சட்டங்களை நீக்கிவிட்டு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் பல நாள் திட்டமாக உள்ளது. ஆனால், அவ்வாறு அறிவிக்கப்படுவது அரசியலமைப்புக்கும் சிறுபான்மையினர்களுக்கும் எதிரானது என்றும் இந்தியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்தானது எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications